Home / Articles / 2024 நாடாளுமன்றத் தேர்தல்

2024 நாடாளுமன்றத் தேர்தல்

அடக்குமுறை, அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படும் மக்கள் சக்தி

எதிர்வரும் பொதுத் தேர்தல் மக்கள் அதிகாரத்தின் திசையை தீர்மானிக்கும் தேர்தல் ஆகும். தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பாராளுமன்றவாதத்தை பின்பற்றி ஒரு தொகுதியில் வெற்றிபெற வரிசையில் நிற்கும்போது , பாராளுமன்றவாதத்திற்கு மாத்திரம் கட்டுப்படாமல் அதற்கு வெளியே மக்கள் அதிகாரத்தைக் கட்டியெழுப்ப வாக்குகோரும் ஒரே கட்சி “ஐக்கிய சோசலிசக் கட்சியாக” மாறியுள்ளது.

பாராளுமன்றக் கட்டமைப்பில் அடைத்து வைப்பதன் மூலம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாது ,பெருந்தெருக்களில்- தொழிற்சாலைகளில்- வேலைத் தளங்களில் மக்கள் சக்தியை உருவாக்குவதன் மூமே உரிமைகளை வெல்ல முடியும். வரலாறு முழுவதும் மக்கள் தங்கள் உரிமைகளை இவ்வாறே வென்றுள்ளனர். மலையக மக்களைப்பொறுத்த வரை ஒரு கட்சி அல்லது வேட்பாளர் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு பாராளுமன்றத்தில்புக வாக்களிக்கப்பட்டபோது, அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்குச்சென்ற ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ கிடையாது. உண்மையான அர்த்தத்தில் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படவில்லை. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதை எமது அனுபவம் தெளிவுபடுத்துகிறது. எனவே உங்கள் பெயரில் வாக்குகளை கோரும் இத் திருடர்களை வெளியேற்ற வேண்டிய நேரம் இது.

சில இடதுசாரிகள் கூறுவது போல் ஐக்கிய சோசலிசக் கட்சி எதிர்க்கட்சியில் ஒருதொகுதியை வெல்வதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை. இதுபோன்ற பாராளுமன்றக் கனவு எமக்கு இல்லை. ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், LGBTIQ சமூகத்தினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளின் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக நாம் வாக்குகளைக் கேட்கிறோம்.

மலையகப்பகுதிகளில் வாழும் மலையகத் தமிழ் மக்கள், 200 ஆண்டுகளாக, மனிதகுலத்தின் மாண்புகளை இழந்துள்ளனர். அவர்கள் இன்னும் அரை அடிமைத்தனத்தில் வாழ்கிறார்கள். சட்டத்தின் முன் சம உரிமைகளைக்கொண்ட பிரஜைகளாக அல்ல, அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கிராமம் இல்லை. வீடு இல்லை. முகவரி இல்லை. அவர்கள் தமது சொந்த இரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டயெழுப்பிய இப்பூமியில் அவர்களுக்கு ஓர் அங்குல நில உரிமைகூட கிடையாது. இறந்த பிறகு, மனிதன் இப்பூமியில் சுதந்திரமாக புதைக்கப்படவேண்டும் அந்த புதைகுழி உரிமைகூட மலையக மக்களுக்கு இல்லை. ஆட்சியாளர்களும் தோட்ட உரிமையாளர்களும் கொண்டாட்டங்களை நடத்திய 200 ஆண்டுகளுக்குப் பிறகும், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையிலும் சுரண்டலிலும் எந்த மாற்றமும் இல்லை.

இத் துயரமான சூழ்நிலையை மாற்றும் நேரம் வந்துவிட்டது. ஒருதொலைநோக்குக் கொண்ட கட்சிக்கு மட்டுமே அதனை சாத்தியமாக்க முடியும். சோசலிமே தீரவுக்கான ஒரேவழி. ஒரு சோசலிச சமுதாயத்தின் மூலம் மட்டுமே, தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் ஆட்சியிலுள்ள வர்க்கம் இலாபத்தை ஈட்டுவதற்கான முதலாளித்துவத்தை ஒழித்து, அதன் உண்மையான வாரிசுகளான தொழிலாளர்களுக்கு விமோசனத்தை வழங்க முடியும்.

சோசலிசத்தை கட்டியெழுப்பக்கூடிய சக்தி, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்திற்கே உண்டு. முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை தகர்த்து, தொழிலாள வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. தொழிலாளர் குழுக்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் மட்டத்தில் ஜனநாயக முறையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வலையமைப்பை உருவாக்குவதன் மூலம் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சியை கவிழ்த்துவிடுவது இனி தாமதமாகாது. ஐக்கிய சோசலிசக் கட்சி அதற்காகப் போராடுகிறது.

-ஸ்ரீநாத் பெரேரா-

About Taniya

Scroll To Top