Home / Articles / மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் !

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் !

மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓரணி திரள்வோம் !

சுமார் 200 ஆண்டுகள் கடந்த நிலையில் மலையத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் முழுமையான மாற்றம் இதுவரை ஏற்படவில்லை. லயன் காம்பராக்களுக்கு சிறைப்படுத்தப்பட்டு உள்ள வாழ்க்கையை மாற்றியமைத்துஇ நாட்டின் ஏனைய மக்களைப்போல சுதந்திரமாக வாழ்வதற்குஇ மலையக மக்களுக்கு உரிமையூண்டு. பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பாடசாலைகளில் கல்விகற்கும் பிள்ளைகளின் கல்வி மிகவூம் சீர்கேடான நிலையிலேயே உள்ளது. சுகாதார நிலைமையூம் மிகவூம் மோசம். சாதாரண சுகயீனத்திற்கு அவசியமான வைத்திய வசதிகள் கிடையாது. பாரம்பரியமாக வாழும் இம்மக்களுக்கு காணி உரிமை வழங்குவதாக அனைத்து அரசாங்கங்களும் உறுதிமொழி கூறினாலும் அவை வெறும் வெற்று வார்த்தைகளாகவே மாறியூள்ளன. எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காகஇ இரத்தத்தையூம்இ வியர்வையையூம் சிந்தும்; மலையக மக்கள் சமமான மரியாதைக்குரிய இலங்கைப் பிரஜைகளாக வாழும் உரிமை அவர்களுக்கு உண்டு.

மிகவூம் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள மக்கள் சமூகமாக இவர்கள் மலையத்தில் வாழ்வதை அடையாளப்படுத்த முடியூம். சுமார் 200 ஆண்டுகளாக கொடூரமான சுரண்டலுக்கு ஆளாகியூள்ள இம்மக்களைத் தொடர்ந்தும் சுரண்ட முடியூமெனஇ ஆட்சியாளர்கள் யோசிப்பதாகத் தோன்றுகிறது. சிங்கள முதலாளித்துவ அரசியல்வாதிகள் மாத்திரம் இவ்வாறு யோசிக்கவில்லை. பெருந்தோட்ட மக்களின் வாக்குகள்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் மலையகத் தமிழ் அரசியல்வாதிகளும் இவ்வாறு யோசிப்பதையிட்டு கவலைப்பட வேண்டியூள்ளது. பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் மேற்படி அரசியல்வாதிகளுக்கு அமையஇ தனிப்பட்ட சொத்தாகும். கொழும்பில் இருக்கும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு தாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெருந்தோட்ட மக்களை ஈடுவைத்துஇ தமது தனிப்பட்ட நலன்களையூம் பிரமுகர் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கும்இ அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அது தம்மால் இலகுவாகச் செய்யக்கூடிய வேலையென அவர்கள் நம்புகின்றனர். ஒருபுறம் தொண்டமான்களும் மறுபுறம் திகாம்பரம்இ ராதாகிரு~;ணன் போன்றவர்களும் பெருந்தோட்ட மக்களுக்கு இறைச்சி எலும்புத் துண்டுகளைக்காட்டிஇ அம்மக்களின் வாக்குகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கோ அல்லது ஐக்கிய தேசியக்கட்சிக்கோ ஏலத்தில் விற்கின்றனர்.

தொடர்ந்தும் மலையக மக்களை ஏமாற்ற முடியாது

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அரச ஊழியர்களின் சம்பளம் 10இ000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டது. தனியார்துறையின் சம்பளமும் பின்னர் 2500 ரூபாயால் உயர்த்தப்பட்டது. ஆனால்இ பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்துவதாக கடந்த பொதுத் தேர்தலின்போதுஇ பெருந்தோட்டத்துறை அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதியை மறப்பதற்கு அவர்களுக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஏனைய முற்போக்கு சக்திகளுடன் ஒன்றிணைந்து நாடுப+ராவூம் முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஒரு மாதிரியாக நாட் சம்பளத்தை 720 ரூபாயால் அதிகரித்துக்கொள்ள முடிந்தது. பெருந்தோட்டத்துறை சமூகத்தின் எதுவித இணக்கப்பாடுமின்றி தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டு ஒப்பந்தங்
களில் கைச்சாத்திட்டு தோட்டத் தொழிலாளர்களை ஒட்டுமொத்தமாகக் காட்டிக்கொடுத்தனர். 2013இல் கிடைக்கவேண்டிய பாக்கிச் சம்பளத்தைக்கூட வழங்காமல் இத்தலைவர்கள் தோட்ட எஜமான்;களிடம் அவற்றை ஒப்படைத்தனர்.

Scroll To Top