யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. 2009 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதிக்கு அண்மித்த நாட்களில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என இன்று வரை யாருக்கும் தெரியாது. பல உறவுகள் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக காத்திருக்கும் போது இறந்தும் உள்ளனர்.
இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடித்தருமாறு கோரிய போராட்டம் ஆரம்பித்து கடந்த பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 7 வருடங்கள் ஆகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எவராலும் நீதி வழங்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் இராணுவத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டதாலாகும்.
அன்றிலிருந்து இன்று வரை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோராத இடம் இல்லை.
இலங்கையில் நீதி கிடைக்காத நிலையில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்ததோடு, சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை எந்த ஆட்சியாளராலும் இவர்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
தெற்கு மக்களும் வடக்கு தமிழ் மக்களின்
தமது உறவினர்களுக்கு நீதி கோரி போராடி வருகின்றனர்.
தெற்கு மக்களும் வடக்கு தமிழ் மக்களின்
இந்த போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்கி அவர்களுடன் கைகோர்ப்போம்.