தேர்தல் களத்தில் இடதுசாரிகளின் சவால்
இலங்கை தீர்க்கமானதொரு திருப்புமுனைக்கு ஊடாகச் சென்றுகொண்டிருப்பதை மிகத் தௌிவாகக் காணக்கூடியதாக உள்ளது. தற்போது முதலாளித்துவ வர்க்கத்தினர் பல குழுக்களாகப் பிரிந்துள்ளனர். தீவிரவாத சிங்கள இனவாதத்தை சுமந்துகொண்டுள்ள மகிந்த ராஜபக்ஷ குழுவினர் இதில் ஒன்றாகும். புதிய தாராளமய நிகழ்ச்சிநிரலின் சார்பில் தோற்றுகின்ற ரணில் விக்கிரமசிங்க மற்றைய குழுவாகும். மைத்திரிபால இந்த இரண்டு தரப்பினருக்கும் இடையே சுழற்சியுறுகின்ற குழுவுக்கு தலைமைத்துவம் வழங்குகிறார்.
இலங்கைச் சமூகம் இச் சிக்கலான நிலைமைக்கு முகம்கொடுப்பது எவ்வாறு என்ற வினாவுக்கு விடைகாண வேண்டியுள்ளது. வடக்கின் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை மீண்டுமொரு தடவை இத்தேர்தலின்போது முதலாளித்துவக் கட்சிகள் மறந்துவிடலாம். இச்சூழலினுள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வொன்றை முன்னிட்டு தோற்றுவதற்கு வற்புறுத்துதல் வேண்டும். அத்தகையதொரு தீர்வுக்காக தோற்றுகின்ற ஒரேயொரு அரசியல் கட்சி ஐக்கிய சோசலிசக் கட்சி மட்டுமேயாகும்.
புதிய தாராளமயவாத திட்டமிடலுக்கும் தீவிர பிற்போக்குவாத இனவாத மற்றும் மதவாத அரசியலுக்கும் எதிராக தொழிலாளர் வர்க்கம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற அதிகாரத்தை தமது கைகளில் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஐக்கிய சோசலிசக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது முதலாளித்துவமற்ற வர்க்கத்தினரின் இயக்கத்திற்கு தலைமைத்துவம் அளிப்பதற்காக அனைத்து விதத்திலுமான இனவாத, முதலாளித்து அரசியலுக்கு எதிராக இடதுசாரிச் சக்திகளைக் கட்டியெழுப்பும் பொருட்டு எதிர்வரும் தேர்தலின்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட தெரிவுசெய்யப்பட்ட சில மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் சார்பில் தோற்றுகின்ற ஏனைய இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டியின்றிய உடன்படிக்கையொன்றின் கீழ் போட்டியிடுவதற்கான இயலுமை பற்றி ஆராய்வது தொடர்பிலும் இங்கு விசேடமாக வலியுறுத்தப்பட்டது.