Home / USP Statements / அரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி!

அரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி!

அரசியலமைப்பு hPதியிலான சதித் திட்டத்தினூடாக அதிகாரத்தை மாற்ற முயற்சி!

எமது நாடு தற்போது முன்னெப்போதும் இல்லாதவாறான ஓh; அரசியலமைப்பு நெருக்கடியை எதிh;கொண்டுள்ளது. ஜனாதிபதி சிறிசேன விக்கிரமசிங்கவூடன் ஏற்படுத்தியிருந்த தேசிய அரசாங்கத்தை வீழ்த்த தனிச்சையாக முடிவினை எடுத்து எதிhpயாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அரவணைத்து அவரை பிரதமா; பதவியில் அமா;த்தியூள்ளாh;. இந்த அரசியலமைப்பு சதி குறித்து எமது நிலைப்பாட்டினை அறிவிப்பதற்கு முன்னா; அண்மையில் நடைபெற்ற எமது கட்சியின் சம்மேளன ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுடன் இந்த விடயத்தினை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும் எனலாம்.
இந்த அரசியல் சதி இடம் பெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு எமது கட்சியான ஐக்கிய சோசலிச கட்சியின் சம்மேளனக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்த சம்மேளனக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் எதிh;கால நோக்கு ஆவணத்தின் முதல் பந்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் முதலாளித்துவ வHக்கம் மோசமான நெருக்கடியை எதிh;கொண்டுள்ள இக் காலப்பகுதியில் எமது கட்சியின் 15வது தேசிய மாநாடு நடைபெறுகின்றது. பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பின்னா; பதவியேற்ற அரசாங்கங்களில் மிகவூம் பலவீனமான அரசாங்கமாக இந்த ‘நல்லாட்சி;’ அரசாங்கத்தை குறிப்பிட முடியூம் என்றும் அந்த ஆவணத்தின் 9வது பந்தியில் அரசாங்கத்தின் இரண்டு பிரதான தரப்பினரான ஐக்கிய தேசியக் கட்சியூம்- சுதந்திரக் கட்சியூம் கூட்டாக அரசாங்கத்தை நடாத்த முடியாதளவிற்கு நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளன. பெயரளவிலேயே அமைச்சரவை கூடுகின்றது. அமைச்சரவையின் ஒரு தரப்பினா; எடுக்கும் முடிவூகளை மற்றைய தரப்பினா; பகிரங்கமாக விமர்சிப்பது பொதுவான நிகழ்வாகியூள்ளது. பதவியேற்ற 100 நாட்களுக்குள் நிறைவேற்றிக் கொண்ட 19வது அரசியலமைப்பு திருத்தம் காரணமாகவே இந்த அரசாங்கம் இன்று வரை பதவியிலிருக்கின்றது. அரசியலமைப்பு திருத்தத்தில் தோ;தலுக்கு பின்பு நான்கரை வருடங்கள் கடக்கும் வரை பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது என்று தொpவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற ஓராண்டின் பின்பு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் முன்பு ஜனாதிபதியிடம் இருந்தமை குறிப்பிடத்தக்து. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மகிந்தவின் தலைமையிலான கூட்டு எதிh;க்கட்சியினரால் சமா;ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனையை வெற்றி பெறச் செய்வதற்காக அரசியல் எதிhpகளான ஜனாதிபதி மைத்திரிபாலவூம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவூம் இரகசியப் பேச்சுவாh;த்தைகளில் ஈடுபட்டதிலிருந்து அரசாங்கம் எதிh;கொள்கின்ற நெருக்கடியை விளங்கிக் கொள்ள முடியூம். ரணிலை பிரதமா; பதவியிலிருந்து விரட்டியடிக்கும் தேவை மகிந்தவைப் போன்று மைத்திhpபாலவூக்கும் உள்ளது. ஆனால் மைத்திhpபாலவினதும் மகிந்தவினதும் ஒன்றிணைந்த நடவடிக்கையினை பாராளுமன்றத்தில் தோற்கடித்து ரணில் தற்காலிகமாக வலிமைப் பெற்றாh;. எனினும் அரசாங்கத்தின் நெருக்கடிக்கு தீh;வூ காண்பதற்கு அம்முயற்சிகள் போதுமானதாக இருக்கவில்லை என்றும் அந்த ஆவணத்தின் இறுதி பந்தியான 41வது பந்தியில் தொடா;ந்து இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சிறிய அதிh;விலும் பாரிய மாற்றங்கள் நிகழ்வதற்கான சூழல் நிலவூம் சமூகத்தில் நாம் தற்போது வாழ்ந்துக் கொண்டிருக்கின்றௌம்.
ஜனாதிபதி சிறிசேனவின் அவசர சதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மாக்சியவாதிகளான நாம் இலங்கையின் முதலாளித்துவ முகாம்கள் இரண்டும் எதிh;கொண்டுள்ள மிக முக்கியமான நெருக்கடி குறித்து மிகவூம் தௌpவான எதிh;வூகூறல்களை முன்வைக்க முடிந்திருந்தமை குறித்து நாங்கள் பெருமையடைகின்றௌம். ஜனாதிபதி சிறிசேன தனது ஜனாதிபதி பதவியினை பயன்படுத்திக் கொண்டு பிரதமா; ரணிலை விரட்டியடித்து விட்டு மகிந்த ராஜபக்சவை பிரதமா; பதவிக்கு நியமித்தமையினால் நாடு பெரும் நெருக்கடி நிலையினை எதிh;கொண்டுள்ளது. சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானதா இல்லையா என்பது குறித்து தற்போது வாதப் பிரதிவாதங்கள் இடம் பெறத் தொடங்கியூள்ளன. எனினும் அரசியல் hPதியில் பாh;த்தால் அவா; இந்த ஆட்சி மாற்றத்தினை பாரதூரமான சதித் திட்டம் ஒன்றினால் மேற்கொண்டுள்ளாh; என்றே கூற வேண்டியூள்ளது. சிறிசேன முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையானது முன்னாள் பிரதமருக்கும்இ அமைச்சரவைக்கும்இ பாராளுமன்றத்திற்கும் தொpயாமல் மேற்கொள்ளப்பட்டதனூடாக இது ஓh; பாhpய சதி என்பதனை புhpந்து கொள்ள முடியூம்.
இதன்படி பாராளுமன்றத்தினால் தொpவூ செய்யப்பட்டுள்ள பிரதமரை நீக்குவதற்கு அவா; பின்பற்றிய அணுகுமுறையினூடாக இது அரசியலமைப்பு சதி என்பதனை புhpந்து கொள்ள முடியூம். இவ்வாறான அரசியலமைப்பு சதி எமது நாட்டில் நடைபெற்ற முதல் சந்தா;ப்பம் இதுவாகும். ஆசியப் பிராந்தியத்தில் பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவூ நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ராஜபக்ச முகாமுக்கு சாh;பான தரப்பினா; இந்த அதிகார மாற்றத்தினை 2015 ஜனவாp மாதம் முன்னாள் பிரதமா; தி.மு. ஜயரத்னவை அகற்றி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெற்றிராத விக்கிரமசிங்கவூக்கு பிரதமா; பதவியினை வழங்க ஜனாதிபதி சிறிசேன எடுத்த நடவடிக்கையூடன் ஒப்பிடுகின்றனா;. இதில் ஒற்றுமை தன்மை இருக்கும் அதேவேளை பல வேறுபாடுகளும் உள்ளன. இவ்வாறு இரண்டு பிரதமா;களை அகற்றுவதற்கு 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் சிறிசேன பின்பற்றிய நடவடிக்கையில் ஒற்றுமை தன்மையில்லை. 2015ல் 62 லட்சம் மக்களின் ஆணையினைப் பெற்று சிறிசேன ஜனாதிபதி பதவியில் அமா;வதற்கு முன்னா;தோ;தல் வாக்குறுதியாக தான் தோ;தலில் வெற்றிப் பெற்றால் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக மக்களுக்கு பகிரங்க வாக்குறுதியை வழங்கியிருந்தாh;. அதனை விட முக்கியமானது விக்கிரமசிங்கவை பிரதமா; பதவியில் நியமித்த பின்பு பாராளுமன்றத்தின் அமா;வூகள் ஒத்தி வைக்கப்படவில்லை என்பதுடன் ராஜபக்ச முகாம் பாராளுமன்றத்தில் விக்கிரமசிங்கவை பிரதமா; பதவியில் நியமித்த போது எந்தவிதமான எதிh;ப்பினையூம் வெளிப்படுத்தவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.
இதனைத் தவிர சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கம் பதவியேற்று முதல் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தத்தில் பிரதமா; பதவியை வகிப்பவா;இறந்தால் அல்லது அவா; பதவி விலகினால் மட்டுமே பிரதமரை மாற்ற முடியூம் என்று மிகவூம் தௌpவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் பற்றிய விவாதம் எவ்வாறாயினும் இம்முறை விக்கிரமசிங்கவை பிரதமா; பதவியிலிருந்து அகற்றிய பின்பு பாராளுமன்ற அமா;வூகளை பிற்போடுவதற்கு ஜனாதிபதி எடுத்த தன்னிச்சையான சா;வாதிகார நடவடிக்கையினைக் கவனத்தில் கொள்ளும் போது இந்த நெருக்கடியின் தீவிர தன்மை வெளிப்படுகின்றது. சிறிசேன கூறுவதன்படி அவா; ஜனநாயகத்தினை மதிப்பவராயின் பிரதமரை மாற்றிய பின்பு அந்த தீh;மானத்தினை உறுதிப்படுத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு விரைவாக சந்தா;ப்பத்தினை வழங்கியிருக்க வேண்டும். ராஜபக்சவூக்கு தேவையான பாராளுமன்ற உறுப்பினா;களை எந்த முறையிலாவதுகொள்வனவூ செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யவே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினா;களுக்கு பாதுகாப்பதற்கு எந்தவொரு அரசியற் கொள்கையூம் இல்லை என்பதுடன் அவா;கள் பணத்திற்காகவூம்இ சலுகைகளுக்காகவூம் மிகவூம் இலகுவாக விலை போகின்றவா;கள் என்பது ஊh; அறிந்த இரகசியமாகும்.
மகிந்த மற்றும் ரணில் இருவரும் தற்போது பாராளுமன்றத்தில் தமக்கு 113 பெரும்பான்மை பலம் இருப்பதாக வலியூறுத்தி வருகின்றனா;. தற்போது பாராளுமன்ற உறுப்பினா;கள் பின்வருமாறு உள்ளனா;. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 87 ஆசனங்கள். ஐக்கிய தேசியக் கட்சியூடன் தொடா;புடைய முன்னணியினை பிரதிநிதித்துவம் செய்கின்ற உறுப்பினா;கள் எண்ணிக்கை 7. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6 ஆசனங்கள். மலையகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் முற்போக்கு முன்னணி 5 ஆசனங்கள். ரிசாட் பதியூதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்கள். ஜாதிக்க ஹெல உறுமயவூம் இதில் அடங்கும். மகிந்த சிறிசேன கூட்டுக்கு 95 ஆசனங்கள் உள்ளன. இதனைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 ஆசனங்களும்இ ஜே.வி.பிக்கும் 6 ஆசனங்கள் உள்ளன. தற்போது இந்த நெருக்கடி நிலையில் ஜே.வி.பி எவருக்கும் ஆதரவூ அளிக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ரணிலுக்கு ஆதரவாக உள்ளது.
பிரதான முதலாளித்துவ முகாம்கள் இரண்டுக்கு இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி மகிந்தவூக்கும் ரணிலுக்கும் மிகவூம் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை தொழிலாளா;கள் வா;க்கம் மற்றும் மக்களுக்கு விடுக்கப்பட்ட மோசமானது ஒரு எச்சாpக்கையாகும். மகிந்தவினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய் விட்டால் நாட்டில் மிகவூம் மோசமான அராஜக நிலையே ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. மகிந்த தனது ஆதரவாளா;களை வீதிக்கு அழைத்து வந்து பாராளுமன்ற தீh;மானத்தினை சவாலுக்குட்படுத்த உள்ள வாய்ப்பினைக் குறைத்து மதிப்பிட முடியாது. குறிப்பாக மகிந்தவூக்கும்இ ரணிலுக்கும் இது ஒரு ‘வோட்டா;லூ’ இறுதி சமராக மாறியூள்ளது.
தற்போது மகிந்த ராஜபக்ச ஆதரவாளா;கள் அரச ஊடகங்கள் உட்பட அரசின் பிரதான நிறுவனங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து தமது அதிகாரத்தினை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தமையின் மூலம் மேற்கூறப்பட்ட செயற்பாட்டின் முன்னோட்டத்தினை காண முடியூம். தற்போது முன்னாள் அமைச்சா; அh;ஜுன ரணதுங்க மற்றும் அவாpன் பாதுகாவலா;களுடன் மகிந்தவின் குண்டா;கள் மேற்கொண்ட கைகலப்பினால் அப்பாவி தொழிலாளா; ஒருவா; இறந்து போனாh;. பாராளுமன்றம் கூடவூள்ள நவம்பா; 14ம் திகதிக்கு முன்பு இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறலாம். மற்றும் எதிh;த் தரப்பு தலைவா;கள் பலா; கைதாகலாம். அத்துடன் ராஜபக்சவூக்கு ஆதரவூ அளிக்கின்ற சமூக ஊடங்களினூடாக கைது செய்யப்பட்டுள்ள ‘படையினரை’விடுவிக்குமாறும் தண்டனைப் பெற்றுள்ள ஞானசாரவை விடுவிக்குமாறும் முன்வைக்கப்படுகின்ற கோhpக்கைகள் எதிh;கால ராஜபக்ச ஆட்சியின் இயல்புகளை வெளிப்படுத்துகின்றன.
சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க இருவரும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஏகாதிப்பத்தியவாதிகளின் நோ;மையான கைக்கூலிகளாக மக்கள் விரோத புதிய தாராளவாத பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தனா;. வேலைநிறுத்தப் போராட்டங்கள்இ மாணவா; போராட்டங்கள் மனிதாபிமானமற்ற முறையில் அடக்கப்பட்டன. ரூபாவின் பெறுமதி குறைய இடமளிக்கப்பட்டு மக்களை துயரத்தில் ஆழ்த்தினா;. தற்போது இவா;கள் இருவரும் ஒருவருக்கொருவா; தூற்றிக் கொள்வது மக்கள் மீதுள்ள அன்பினால் அல்ல. அதிகார வெறியினால் என்பதனை மக்கள் புhpந்து கொள்வது அவசியம்.
இந்த நிலைமையில் சோசலிச மாற்று சக்திக்காக பாடுபடுகின்ற நாம் தொழிலாளா; வா;க்கமும் தொழிற்சங்கங்களும் உழைக்கும் மக்கள் உட்பட அனைத்து ஒடுக்குமுறைக்குக்குள்ளாகும் மக்களின் முக்கிய கோhpக்கைகளை வென்றெடுப்பதற்காக முதலாளித்துவ வா;க்கத்திற்கு அடிமையாகாது அவா;களின் சதிவலைக்குள் விழாமல் சுயாதீனமான இடதுசாhp வேலைத் திட்டத்திற்காக விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றௌம். முதலாளித்துவ ஆட்சியில் தேசிய அழுத்தத்திற்குட்பட்டுள்ள தமிழ் மக்களை இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்வதும் அவசியமாகும். இதனூடாக உழைக்கும் வா;க்கத்தின் பரந்துபட்ட இயக்கம் ஒன்றைக் கட்டியெழுப்பி தொழிலாளா;களின் மற்றும் வறிய விவசாயிகளின் நலன் பேணும் ஜனநாயக சோசலிச நிh;வாகத்திற்கான நீண்ட கால வேலைத் திட்டத்திற்காக அணி திரளுமாறு அனைவாpடமும் கோhpக்கை விடுக்கின்றௌம்.

சிறிதுங்க ஜயசூhpய
பொதுச் செயலாளா;
ஐக்கிய சோசலிச கட்சி

About dhammika

Scroll To Top